கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கலக்கல் : நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறியும் "மொபைல் ஆப்"

கலிபோர்னியா : இன்றைய கலியுலகில் அடுத்தது என்ன நிகழுமோ என்ற அளவிற்கு இயற்கை சீற்றங்கள் அரங்கேறி வருகிறது. அதற்கு காரணம் நான் இயற்கை சூழலை சின்னாபின்னம் படுத்தியதே தான். அந்த வகையில் நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் உஷார் தான்... இதற்காக அறிமுகபடுத்தப்பட்டுள்ளது 'மை ஷேக்' மொபைல் ஆப்.

ஜிபிஸ் மூலம் அதிர்வு

நிலநடுக்கம் வருவதை இந்த ஆப் மூலம் எளிதாக முன்கூட்டியே அறியலாம். அண்ட்ராய்டு மொபைல்களில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம். சீஸ்மோமீட்டர் எனும் கருவியினால் மொபைலில் உள்ள ஜிபிஸ் மூலம் இந்த அதிர்வுகள் உணரப்பட்டு அறிவிக்கப்படுகிறது.

இது வரை இரண்டு லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர். 

ரிக்டர் அளவில் 2.5 அளவு தோன்றும் சில சிறிய நில அதிர்வுகளை முன்கூட்டியே இந்த ஆப் தெரிவித்துவிடும். மை ஷேக் ஆப் மொபைல் நெட்வொர்க்கில் சேவை மையமாக செயல்பட்டு செய்தியை அனுப்புகிறது. இதன்மூலம் நிலநடுக்கம் இடம் மற்றும் அதிர்வின் அளவு தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் பொருட்சேதம், உயிர்ச்சேதம் பாதுகாக்கப்படுகிறது. 

எச்சரிக்கை 

இந்த மொபைல் ஆப்பை கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அந்த கல்லூரியின் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் கூறுகையில், மை ஷேக் சிறப்பாக செயல்படுகிறது. அளப்பரிய தரவுத்தொகுப்புகளை கூட வழங்குகிறது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாதனமாக இந்த மை ஷேக் உள்ளது. சில விநாடிகளில் இது வழங்கும் எச்சரிக்கை ஏராளமான மக்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...